"முள்ளு குத்திருச்சுடா" னு ஒருத்தன் சொல்ல "தரையில தேய்டா" இன்னொருத்தன் சொல்றான். இதவே ரெண்டு சங்க புலவர்கள் பேசினா!?
உரையாடல்:
முதல் புலவன் :அக்காலை பொழுதினிலே முக்காலை ஊன்றி மூவிரண்டு போகையிலே ஐந்து தலை நாகமொன்று ஆழ்ந்து கடித்ததுவே!
இரண்டாம் புலவன் : பத்து ரதன் புத்திரன், புத்திரனின் மித்திரன், மித்திரனின் சத்துரு, சத்துருவின் மனைவியின் காலெடுத்து தேய்...
பொருள் :
முதல் புலவன் : அந்த காலை பொழுதில் கைத்தடி ஊன்றி , ஆற்றுக்கு(3 X 2) செல்கையில், ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சி முள் ஒன்று தைத்து விட்டதாக ஒரு புலவன் கூறினான்...
இரண்டாம் புலவன் : தசரதன் புதல்வனாகிய ஸ்ரீ ராமனின் தளபதி சுக்கிரீவனின் எதிரியான வாலியின் மனைவி தாரையின் காலெடுத்து தேய்த்தால் சரியாகிவிடும் என்றான். அதாவது தாரை என்பதில் உள்ள காலை எடுத்துவிட்டால் வரும் தரையில் தேய்க்க சொன்னான்...
பொருள் விளக்கம் :
பத்து ரதன் = தசரதன்;
புத்திரன் = மகன்;
மித்திரன் = தளபதி;
சத்ரு = எதிரி;
பின் குறிப்பு: உக்காந்து யோசிப்பாங்களோ.........
Subscribe to:
Post Comments (Atom)


3 comments:
கருத்து:
இந்த பொருள் விளக்கம் மிக அருமையாக உள்ளது என்று நான் கூறினால் அது "வஞ்சப்புகழ்ச்சி" ஆகிவிடும். நல்லாவே இல்லை என்று கூறினால் அது "காழ் புணர்ச்சி" ஆகி விடும்.
புதிய முகம் என்ன சொல்லுகிறார் என்று பார்க்க வந்தேன். உங்கள் துவக்கமே நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
//ஏதாவது நல்ல விஷயம் செய்யனுங்கற நினைப்போட develop பண்ண Blog. நீங்களும் உங்க பங்குக்கு ஏதாவது செய்ங்க//
மிக நல்ல எண்ணம். துடிப்புள்ள இளம்பிராயத்தின் எண்ணங்கள். காலப்போக்கிலும், மாறாமல் தொடர வாழ்த்துக்கள். நிறைய நல்லன செய்யுங்கள். இடையில் அடிக்கின்ற காற்றில், கலைந்து போய்விடாமல் எண்ணிய, திண்ணிய முடிக்க வாழ்த்துக்கள்
அன்பு ஓம்,
உங்கள் பதிவு சிறக்க நாங்கள் வாழ்த்துவோம்..
Post a Comment