அக்னி குஞ்சொன்று கண்டேன், அதை ஆங்கே ஓர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...

Wednesday, November 12, 2008

Flickr

This is a test post from flickr, a fancy photo sharing thing.

Tuesday, November 21, 2006

முள்ளு குத்திருச்சுடா!

"முள்ளு குத்திருச்சுடா" னு ஒருத்தன் சொல்ல "தரையில தேய்டா" இன்னொருத்தன் சொல்றான். இதவே ரெண்டு சங்க புலவர்கள் பேசினா!?
உரையாடல்:
முதல் புலவன் :அக்காலை பொழுதினிலே முக்காலை ஊன்றி மூவிரண்டு போகையிலே ஐந்து தலை நாகமொன்று ஆழ்ந்து கடித்ததுவே!
இரண்டாம் புலவன் : பத்து ரதன் புத்திரன், புத்திரனின் மித்திரன், மித்திரனின் சத்துரு, சத்துருவின் மனைவியின் காலெடுத்து தேய்...
பொருள் :
முதல் புலவன் : அந்த காலை பொழுதில் கைத்தடி ஊன்றி , ஆற்றுக்கு(3 X 2) செல்கையில், ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சி முள் ஒன்று தைத்து விட்டதாக ஒரு புலவன் கூறினான்...
இரண்டாம் புலவன் : தசரதன் புதல்வனாகிய ஸ்ரீ ராமனின் தளபதி சுக்கிரீவனின் எதிரியான வாலியின் மனைவி தாரையின் காலெடுத்து தேய்த்தால் சரியாகிவிடும் என்றான். அதாவது தாரை என்பதில் உள்ள காலை எடுத்துவிட்டால் வரும் தரையில் தேய்க்க சொன்னான்...
பொருள் விளக்கம் :

பத்து ரதன் = தசரதன்;
புத்திரன் = மகன்;
மித்திரன் = தளபதி;
சத்ரு = எதிரி;

பின் குறிப்பு: உக்காந்து யோசிப்பாங்களோ.........

Monday, November 20, 2006

பாரதியிடமிருந்து என்னை கவர்ந்த சில

நின்னை சில வரங்கள் கேட்பேன்;
அவை நேரே இன்றெனக்கு தருவாய்...
முன்னை தீவினை பலன்கள் அவை-
மூளாதழிந்திடல் வேண்டும்;
இனி என்னை புது உயிராக்கி -
மதி தனை மிக தெளிவு செய்து,
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்...

என்னைக் கவர்ந்த கவிதை

கல்லூரி சென்று கலர் பார்க்கும் காளையர்களே!...

நீங்கள் நினைத்தால்

வெள்ளைக்கும் கலர் தரலாம்...